Homeசெய்திகள்அரசியல்விசிக இணைந்து உருவாக்கிய இந்திய கூட்டணியை பாதுகாப்போம் - தொல். திருமாவளவன்

விசிக இணைந்து உருவாக்கிய இந்திய கூட்டணியை பாதுகாப்போம் – தொல். திருமாவளவன்

-

- Advertisement -

விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து உருவாக்கிய இந்திய கூட்டணியை பாதுகாப்பதில் எங்களுக்கும் கடமை இருக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விசிக இணைந்து உருவாக்கிய இந்திய கூட்டணியை பாதுகாப்போம் - தொல். திருமாவளவன்

தமிழக அரசியலில் கொள்கை தெளிவும், புரிதலும் உள்ள ஒரு தலைவர் திருமாவளவன். கடந்த சில நாட்களாக கூட்டணி குறித்து பேசும் போது அவரிடம் தடுமாற்றம் தெரிகிறது. அவர் கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜூன் பேசுவதை ஆதரிப்பதா? கண்டிப்பதா என்ற தெளிவில்லாமல் இருப்பதாக சமூக ஊடகங்கள் கூறி வருகிறது.

ஆனால் அவர், நான் இப்போது திமுக தலைமையிலான கூட்டணியில் தான் இருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்,
மோடியின் நிர்வாகத் திறன் எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதற்கு மணிப்பூர் கலவரம் சாட்சியாக இருக்கிறது.

மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்துக்கு இன்றைய ஒன்றிய அரசை பொறுப்பு. இது தொடர்பாக மோடி வாய் திறப்பதில்லை. பிரச்சினைக்கு தீர்வுகாண அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருடைய நிர்வாகத் திறன் எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதற்கு மணிப்பூர் கலவரம் சாட்சியாக இருக்கிறது என்றார்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து உருவாக்கிய கூட்டணி இந்தியா கூட்டணி. எனவே நாங்கள் இணைந்து உருவாக்கிய அந்த கூட்டணியை பாதுகாப்பதும், வலுப்படுத்துவதும். அதில் எங்களுக்கும் கடமை இருப்பதே மறுபடியும் உறுதிப்படுத்துகிறேன் என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி வலிமை பெற, வலிமை பெற சிரமமும் கூடும். வலிமை பெற்று வரும் அதே வேளையில் சிரமங்களையும் சந்தித்து வருகிறோம்‌ என்றார்.

நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

MUST READ