spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அண்ணாமலை செல்வது பாதயாத்திரை அல்ல பாவ யாத்திரை- மு.க.ஸ்டாலின்

அண்ணாமலை செல்வது பாதயாத்திரை அல்ல பாவ யாத்திரை- மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

அண்ணாமலை செல்வது பாதயாத்திரை அல்ல பாவ யாத்திரை- மு.க.ஸ்டாலின்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்வது பாத யாத்திரை அல்ல, கொடூரங்களுக்கு பரிகாரம் தேடும் பாவ யாத்திரை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MKStalin

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அமித்ஷா தொடங்கி வைத்திருப்பது பாத யாத்திரை அல்ல, 2002 ல் குஜராத்திலும், இப்போது மணிப்பூரிலும் நடந்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கும் பாவ யாத்திரை, மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தலாம் என்று யாத்திரை தொடங்கிவைத்திருக்கிறார். பாஜகவில் யாருடைய வாரிசும் கட்சியில் இல்லையா? பதவியில் உள்ள பாஜகவின் வாரிசுகளை பட்டியலிட்டால் பதவி விலகி விடுவார்களா? தமிழகத்திற்கு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க மத்திய அமைச்சர் அமித்ஷா வரவில்லை.

we-r-hiring
"நாங்களும் இந்தியாவின் வெற்றிக்காகதான் பாடுபடுகிறோம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: CM MKStalin

திராவிட கருத்துகளை எடுத்துச்சொல்லும் வாரிசுகள்
உருவாகிக் கொண்டே இருக்கவேண்டும். மக்கள் மனதில் இருந்து பெரியார், அண்ணா, திராவிட கருத்தியல் மறைந்துவிடும் என நினைத்த எதிரிகளின் ஆசையில் மண் விழுந்துவிட்டது. நமது எதிரி எந்த ஆயுதத்தை எடுக்கிறார்களோ, நாமும் அந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும். திமுக குடும்பக் கட்சி என கேட்டுக் கேட்டு புளித்துபோய்விட்டது. உதயநிதி காட்டிய ஒற்றை செங்கல்லை எண்ணி எதிரிகள் இன்னமும் புலம்பி கொண்டிருக்கின்றனர். அமைச்சர் உதயநிதியால் கட்சிக்கும் ஆட்சிக்கும் நல்ல பெயர் கிடைத்துள்ளது” என்றார்.

MUST READ