spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பாஜக-வுடன் நா.த.க இணைப்பு..? சீமான்- ரஜினி சந்திப்பின் பகீர் பின்னணி

பாஜக-வுடன் நா.த.க இணைப்பு..? சீமான்- ரஜினி சந்திப்பின் பகீர் பின்னணி

-

- Advertisement -

இனி சீமானை பாஜகவின் பி டீம் என யாரும் சொல்ல முடியாது. ஏனென்றால் ரஜினியை சந்தித்துப் பேசிய பின்னணி ரகசியம் அப்படிப்பட்டது.

தமிழ் தேசியத்தை மிகவும் தீவிரமாக கடைபிடித்து வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்றதும் கடுமையாக எதிர்த்தார். தற்போது அரசியலில் ஒதுங்கி நிற்கும் ரஜினியை சீமான் பாராட்டி பேசியதும், நேரில் சந்தித்ததும் என களம் மாறியிருக்கிறது. அதிலும் நேற்று நடந்த சந்திப்பு என்பது தற்போதைய அரசியல் சூழலில் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.

we-r-hiring

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினியின் இல்லத்திற்கு சென்ற சீமான், அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேசியுள்ளார்.

அதில் 20 நிமிடங்கள் வரை அரசியல் குறித்து பேசியுள்ளனர். திமுக ஆட்சியின் செயல்பாடுகள், விஜய் கட்சியின் அரசியல் மாநாடு, 2026 சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவை குறித்து விவாதித்துள்ளனர். அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கு வங்கியை அதிகரித்தபடி சீமான் பயணித்து வருகிறார். ஆனால் தனிப்பெரும் சக்தியாக சிறிய அதிகாரத்தை கைப்பற்றும் இடத்திற்கு கூட இன்னும் வரவில்லை.

இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் 2026 சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இது சீமானுக்கு முக்கியமான தேர்தல். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் மூலம் புதிதாக அரசியலுக்கு வந்துள்ளார். எனவே வாக்குகள் பிரியும் எனப் பலரும் காய் நகர்த்தி வருகின்றனர். இது நாம் தமிழர் கட்சிக்கு சிக்கலாக மாறிவிடக் கூடாது. எனவே பல்வேறு வகைகளில் வாக்குகளை அறுவடை செய்ய திட்டமிட்டு வருகிறார். இதையொட்டிய அரசியல் கணக்குகளில் ரஜினி உடனான சந்திப்பு கவனிக்கதாக மாறியுள்ளது.

ஆனால் இந்த சந்திப்பை முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறுகிறார்கள் காரணம், விஜய் ஆரம்பித்துள்ள கட்சிக்கு நாம் தமிழர்கள் வாக்குகள் செல்லும், பல தேர்தல்களை சந்தித்த பிறகு சிறிய அதிகாரத்தைக் கூடப் பெறமுடியாமல் தவிக்கிறார் சிமான். கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பிரிந்து செல்கின்றனர். இதையெல்லாம் கணக்குப் போடுகிறார் சீமான். மற்றொரு பக்கம் பாஜக தமிழகத்தில் வலுவாக காலூன்ற முயற்சித்து வருகிறது. ஆனால், ஒற்றை சதவிகிதத்தை தாண்டி அக்கட்சியால் சாதிக்க முடியவில்லை. மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைக்க முடியவில்லை.

அதிமுக கூட்டணிக்கு வர மறுக்கிறது. திமுக கூட்டணிக் கட்சிகளுடன் வலுவாக இருக்கிறது. விஜய் பாஜக கூட்டணிக்கு நிச்சயம் வர மாட்டார். இதையெல்லாம் கணக்குப்போட்டு பாஜக- நாதக இணைந்து கூட்டணி அமைக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் பாஜகவுக்கு நெருக்கமானவர்கள் தரும் தகவல் என்னவென்றால், பாஜகவுடன் நாம் தமிழர் கட்சியை இணைக்க ரஜினி மூலம் நடந்த முதல் கட்டப்பேச்சு வார்த்தை தான் நேற்றைய சந்திப்பு என்கிறார்கள்.

‘‘அப்படி இணைத்தால் பண பலன்களோடு, தமிழக பாஜக தலைவர், முதலமைச்சர் வேட்பாளர் பதவி சீமானுக்கு கொடுக்க முடிவாகி உள்ளது. அண்ணாமலை துணை தலைவராக இருப்பார். 2025 ஏப்ரல் மாதம் அமித்ஷாவை சந்தித்த பிறகு இணைப்பு விழா நடைபெறும்’’ என்கிறார்கள். ரவீந்திரன் துரைசாமியின் ஏற்பாட்டில் பாஜக அசைன்மெண்ட்டுக்கான சந்திப்பு தான் நேற்றைய ரஜினி சீமான் சந்திப்பு’ என்கிறார்கள்.

கீழே சீமான் பேசியதை எழுதி இருக்கிறோம். மேலே உள்ள தகவலுக்கு ஒத்துப்போனால் அந்தத் தகவலில் அடிப்படை உண்மை இருக்கிறது என்பதே அர்த்தம்.

இது சிமான் பேசியது, ‘‘இங்கு தேர்தல் அரசியல் தான் செய்யப்படுறது. மக்கள் அரசியல் செய்யப்படுவதில்லை. அந்த அமைப்பு சரியில்லை என்று நானும், ரஜினிகாந்தும் முன்பே சொல்லியிருக்கிறோம். அதைப்பற்றி தான் பேசினோம். நாடும், மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே அரசியல் தான். அரசியல் என்பது வாழ்வியல். இங்கு அரசியல் என்பது எதுவுமில்லை. அரசை தீர்மானிப்பது அரசியல் தான். விமர்சனத்தை கடக்க முடியாதவர்களால் இலக்கை அடைய முடியாது. சங்கி என்றால் சக தோழன், நண்பன் என்று தான் அர்த்தம். இவர்கள் சங்பரிவாரில் இருந்து எடுத்து சங்கி என்கிறார்கள்.’’ என அவர் பேசி உள்ளார்.

இனி சீமானை பாஜகவின் பி டீம் என யாரும் சொல்லவே முடியாது

MUST READ