தந்தை பெரியாரை இழிவுப்படுத்திய சீமான் ஈரோடு இடைத்தேர்தலில் எப்படி மக்களை சந்தித்து வாக்கு கேட்பார் என்றும் இதற்கான சரியான பதிலடியை மக்கள் கொடுப்பார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தி.நகர் பகுதியில் மாவட்டத் தலைவர் முத்தழகன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார். உடன் மாநில நிர்வாகிகள் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, தமிழ் தான் மூத்த மொழி தமிழர்கள் தான் மூத்த குடி என்று ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தார்கள். ஆனால் சமஸ்கிருதம் தான் மூத்த மொழி, சிறந்த மொழி என்று சொன்னவர்கள் இன்று தமிழ் மொழியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். கீழடி பொருநை உள்ளிட்டவை ஆய்வு அடிப்படையில் உலகமே ஏற்றுக் கொள்ளும் வகையில் உறுதி செய்து இருக்கின்றனர் என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழி பெருமை எல்லாம் பேசி வருகிறார். ஆனால் தமிழ்நாட்டின் உரிமை, நிதி கொடுக்க மறுப்பதாக தெரிவித்தார். மத்திய அரசின் இந்த செயல் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். உடனடியாக தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதி பங்களிப்பை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் பள்ளி கல்வித் துறையைக்கு வர வேண்டிய நிதயையும் மத்திய அரசு மறுப்பதாகவும் கூறினார்.
பெரியார் என்னும் நெருப்பை தொடுபவர்கள் எரிந்து போய் விடுவார்கள் – எம்.எம். அப்துல்லா