பெரியார் என்னும் நெருப்பை தொடுபவர்கள் எரிந்து போய் விடுவார்கள் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா பேட்டியளித்தள்ளார்.
தேர்தலில் நிற்கவே பயப்படுபவர்களுக்கு வாக்காளர்கள் பொதுத்தேர்தலிலும் வாக்களிக்காமல் இருப்பதே நல்லது. ஒரு இடைத்தேர்தலிலே நிற்பதற்கு பயப்படுபவர்கள் பொது தேர்தலில் ஓடி ஒளிய முடியாமல் வேறு வழி இல்லாமல் வருவார்கள். அதனால் நிற்பதற்கே பயப்படுபவர்களுக்கு பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்காமல் இருப்பது நல்லது
ஒன்றிய பாஜக அரசோடு முன்பு நல்ல உறவில் இருந்தார்கள் தற்போது கள்ள உறவில் இருக்கிறார்கள். ஏற்கனவே இடைத்தேர்தலின் போது நாங்கள் தவறு செய்திருந்தால் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள். நடவடிக்கை எடுத்து இடைத்தேர்தலில் இது போன்று செயல்படாமல் இருக்க செய்திருக்க வேண்டியதுதானே.
வரம்பு மீறி செயல்படுவது ஆளுநரா? அல்லது தமிழ்நாடு முதலமைச்சரா என்பது தமிழ்நாடு மக்களுக்கே தெரியும். எப்போதெல்லாம் ஒன்றிய அரசிடமிருந்து ஆளுநர்கள் அனுப்பப்படுகிறார்களோ அப்போதெல்லாம் வரம்பு மீறி அவர்கள் செயல்படுவதற்காகவே ஒன்றிய அரசிடமிருந்து ஆளுநர்கள் அனுப்பப்படுகிறார்கள். இது மக்கள் அனைவருக்கும் தெரியும்.
வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் மேஜர் ரோல் ப்ளே செய்யப்போவது தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும்தான். 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கூறியிருக்கிறார். என்னைக் கேட்டால் நான் 234லும் வெற்றி பெறுவோம் என்று தான் கூறுவேன். முதலமைச்சர் எப்போதும் தன்னடக்கமாக இருப்பவர் அதனால் தான் சற்று அடங்கி இருநூறு தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று கூறி இருக்கிறார். எதார்த்தம் 234/234 தொகுதியையும் நாங்கள் பெறுவோம்.
அண்ணாமலை குறித்த கேள்விக்கு நல்ல அரசியல் தலைவர்களை பற்றி பேசுவோம் என்றார். புதுக்கோட்டையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா பேட்டி.