spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்”பிரதமராவதற்கு தகுதியானவர் ஈபிஎஸ் தான்”- பொன்னையன்

”பிரதமராவதற்கு தகுதியானவர் ஈபிஎஸ் தான்”- பொன்னையன்

-

- Advertisement -

”பிரதமராவதற்கு தகுதியானவர் ஈபிஎஸ் தான்”- பொன்னையன்

தமிழ்நாட்டில் இருந்து அடுத்த பிரதமராக வருவதற்கு தகுதியானவர் எடப்பாடி பழனிசாமி தான் என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கருத்து தெரிவித்துள்ளார்.

"பட்டாசு ஆலைகளை அரசு கண்காணிக்க வேண்டும்"- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
File Photo

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் சென்னையில் கோவிலம்பாக்கத்தில் நடந்த தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய போது , ’’ தமிழகத்தில் முதல்வராக வேண்டும் என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்காமல் தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்த நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்று நினைக்க வேண்டும். ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவரை பிரதமராக்க வேண்டும். இது பாஜகவால்தான் சாத்தியமாகும். இதற்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்தமிழகத்தைச் சேர்ந்த காமராஜரும் , ஜிகே முப்பனாரும் பிரதமராகும் வாய்ப்பு உருவானது . அதை திமுக தான் கெடுத்தது” எனக் கூறினார்.

admk ponnaiyan

we-r-hiring

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், “தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக வருவதற்கு தகுதியான நபர் எடப்பாடி பழனிசாமிதான். இந்திய, உலக அரசியலை தெரிந்தவர். விரல் நுனியில் புள்ளி விவரங்களை வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமிதான் தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக கூடிய தகுதி உள்ளவர். தமிழ்நாட்டில் இருந்து இரு பிரதமர்களை தவறவிட்டதாக அமித்ஷா கூறியதில் உண்மை தன்மை இருக்கிறது. பாஜகவின் மத ரீதியான கொள்கையால் அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்துவிட்டது. ஆகவே பாஜகவின் கொள்கையை மாற்ற சொல்லியுள்ளோம். அவர்கள் மாற்றுவார்கள் என நம்புகிறோம். காமராஜர், மூப்பனார் திறமைமிக்கவர்கள் என்பதால் அவர்கள் பிரதமராக வேண்டும் என மாநில முதலமைச்சர்கள் விரும்பினர்” என்றார்.

MUST READ