
தே.மு.தி.க. பொதுச்செயலாளராகத் தேர்வு பிரேமலதா விஜயகாந்த், கடந்து வந்த பாதை குறித்து விரிவாகப் பார்ப்போம்.

வசந்த் ரவியின் அடுத்த படம்….. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அறிவிப்பு!
கடந்த 1969- ஆம் ஆண்டு மார்ச் 18- ஆம் தேதி பிறந்த பிரேமலதா விஜயகாந்த், இளங்கலை ஆங்கிலம் பட்டப்படிப்பைப் படித்தவர். நடிகராக விஜயகாந்த் உச்சத்தில் இருந்த போது, அவரது மனைவியானார் பிரேமலதா. இவர்களது திருமணம், கடந்த 1990- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரையை நடைபெற, அதனை முன்னின்று நடத்தி வைத்தார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.
இல்லத்தரசியாக மட்டுமில்லாமல், அப்போதே ரசிகர் மன்ற நிர்வாகம், கல்லூரி நிர்வாகத்தை கவனித்துக் கொண்டார் பிரேமலதா விஜயகாந்த். கடந்த 2005- ஆம் ஆண்டு செப்டம்பர் 15- ஆம் தேதி தே.மு.தி.க. கட்சியை விஜயகாந்த் தொடங்க, அதில் இணைந்து கட்சியைக் கட்டமைத்ததில் முக்கிய பங்காற்றினார் பிரேமலதா விஜயகாந்த்.
கடந்த 2011- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்த தே.மு.தி.க. 41 தொகுதிகளில் போட்டியிட, அதில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. இந்த தேர்தல் களத்தில் கட்சிக்காக, பிரேமலதா விஜயகாந்த், தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.
விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐசி’…. முதலில் இந்த டாப் ஹீரோ தான் நடிக்க இருந்தாரா?
பிறகு, கடந்த 2018- ஆம் ஆண்டு தே.மு.தி.க.வில் பொருளாளராக நியமிக்கப்பட்ட பிரேமலதா விஜயகாந்த், தனது கணவர் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் முழு நேர அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
இப்படியான சூழலில் தற்போது தே.மு.தி.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.