அதிமுக மூத்த தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், செங்கோட்டையன் சமாதானம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், இபிஎஸ்ஸை சந்திப்பதை சில வாரங்களாக தவிர்த்தாா். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்தார். இந்நிலையில், ஆதிமுக வின் மூத்த உறுப்பினர்களான தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் செங்கோட்டையனிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், சுமுகத் தீர்வு ஏற்ப்பட்டுள்ளதாகவும் இனி கருத்துவேறுபாடுகள் இருக்காது எனவும், செங்கோட்டையன் மீண்டும் இணக்கமாக செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்துவது போல் சட்டப்பேரவைக்கு வந்த செங்கோட்டையன், அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டுள்ளார். மேலும், பள்ளிக்கல்வித் துறை விவாதத்தின்போது செங்கோட்டையனை பேச அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் எடப்பாடி பழனிச்சாமி வாய்ப்பு கேட்டுள்ளது குறிப்பிடதக்கது.
வீட்டை வாங்கிவிட்டு பல்லாயிரம்பேர் அழுகிறார்கள்: அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் உச்ச நீதிமன்றம்