- Advertisement -
திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தேர்தல் பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.
”தமிழ்நாடு தலைகுனியாது” என்ற கருப்பொருளில் 234 தொகுதிகளிலும் பரப்புரை பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளாா். கட்சியின் 20 நட்சத்திர பரப்புரையாளர்களைக் கொண்டு பிப்ரவரி முழுவதும் 234 தொகுதிகளிலும் பரப்புரை பயணத்தை மேற்கொள்ள மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளாா்.

ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பிரமுகர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோரை ஒரே இடத்தில் அழைத்து கலந்துரையாடல் நடத்தவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
278 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பமேளா விழாவில் “சனாதன தர்மம் காப்போம்” – மல்லிகார்ஜுனா கார்கே


