spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தெலுங்கானாவில் புதிய விடியல் திட்டம் - காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

தெலுங்கானாவில் புதிய விடியல் திட்டம் – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

-

- Advertisement -

தெலுங்கானாவில் ஒரு புதிய விடியலுக்கான எங்கள் திட்டம் தயாராக உள்ளது என தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என கூறினார்.

தெலுங்கானா மாநில மக்கள் மாற்றத்தை விரும்புவதாக, தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே, தெலுங்கானாவில்  நடைபெற்ற மாபெரும் பேரணி மக்களின் குரலாக இருப்பதாக தெரிவித்தார்.

we-r-hiring

ஆயிரத்து  360 கிலோமீட்டர் தூரம் கொண்ட எங்கள் பாதயாத்திரை கம்மத்தில் நிறைவு பெற்றதுதாக கூறிய அவர், தெலுங்கானாவை சேர்ந்த பல மூத்த தலைவர்கள், காங்கிரஸ் கட்சியில் இணைந்து மக்களின் கரங்களை பலப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

தெலுங்கானாவில் கூட்டுத் தலைமையால் காங்கிரஸ் கட்சி பெருமிதம் கொள்வதாக கூறிய மல்லிகார்ஜுன கார்கே, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என கூறினார்.

MUST READ