மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, ”Wait and see எனவும், முதல்வர் கரத்தை வலுப்படுத்த மக்களின் நம்பிக்கையுடன் மேலும் பலர் திமுகவில் இணைவார்கள் என அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளாா்.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் சார்பில் தொடங்கப்படவுள்ள செவிலியர் கல்லூரி அமைக்கப்படவுள்ள இடத்தினை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் இந்து அறநிலைத் தறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, இந்து சமய அறநிலையத்துறையில் இந்த அரசு பக்தர்களுக்கு மட்டும் அல்லாது ஏழை மற்றும் எளிய மக்களின் கல்வி வளர்ச்சிக்கும் பணிபுரிகிறது. தற்போது இந்த துறையில் 25 பள்ளிகள் 10 கல்லூரிகள் செயல்பாட்டில் உள்ளது. ஒட்டுமொத்தமாக 22,807 மாணவர்கள் பயில்கிறர்கள்.
பழனியில் உள்ள திருக்கோயிலில் மதிய நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், காலை நேரத்திலும் 4,500 பேருக்கு உணவு வழங்கப்படும் என்றும் கூறினார். அத்துடன், பழனி மாணவர் விடுதிகளில் பயிலும் மாணவர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த ஆட்சிக்கு பிறகு தான் 4 புதிய அரசு கலைக் கல்லூரிகள் துறையின் கீழ் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்காக 138 கோடி ரூபாய் செலவில் ஆய்வறைகள், நூலகங்கள், கழிவறைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.
கீழ்பாக்கம் ஏகாம்பரநாதர் மேல்நிலைபள்ளியில் 980 பிள்ளைகள் பயில்கிறார்கள். இப்பள்ளி வளாகத்தில் 7.86 ஏக்கர் நிலத்தில் செவிலியர் கல்லூரி அமைக்கப்படும் என்றும், முதற்கட்டமாக 60 முதல் 100 மாணவர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஓய்வு பெற்ற நாராயணன் பாபு துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் சிற்ப மற்றும் கட்டிடம் கலைப் பயிற்சி பள்ளி, சமயபுரத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் வருகின்ற 8 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் அறிவித்துள்ளாா்.
மருதமலையில் இந்த துறை சார்பாக் பாலிக்டெக்னிக் கல்லூரி கட்டுவதற்காக முறையாக அனுமதி பெற்று மண் பரிசோதனை மேற்கொண்டு அதற்கான பணிகளை தொங்க உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
ஆங்கிலோயர் ஆட்சி காலத்தை தொடர்ந்து தனியாரிடம் இருந்த திருக்கோயில்கள் எந்த நோக்கத்திற்காக இந்த துறையிடம் ஒப்படைக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக இந்த துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
திமுக ஆட்சி எப்போது வீட்டுக்கு எப்போது செல்லும் அதிமுக ஆட்சி எப்போது வரும் என மக்கள் கேட்கிறார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியது குறித்தான கேள்விக்கு,
”அவர்களின் கட்சியிலேயே தற்காலிக பொதுச்செயலாளர் தலைமை எப்போது ஒழியும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள், என கிண்டலாக பதிலளித்தார்.”
கோவையில் மாணவி பாலியல் குற்றச்சம்பவம் குறித்தும் சட்ட ஒழுங்கு குறித்தும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு குறித்தான கேள்விக்கு,
” இந்த சம்பவத்தில் 48 மணி நேரத்திற்குள் மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளோம். முதலமைச்சர் 30 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விரைவான தண்டனை பெற உத்தரவிட்டுள்ளார். இதற்கும் மேலாக அரசு எவ்வளவு விரைவாகச் செயல்பட முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளாா்.
போதை புழக்கம் அதிகமாக உள்ளதால் தான் இது போன்ற தவறுகள் நடப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியது குறித்தான கேள்விக்கு, ”அவர்களின் நோக்கம் குற்றச்சாட்டு சொல்லுவதுதான். முதல்வர் தானே தனிப்பட்ட முறையில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.சட்டம் ஒழுங்கை காப்பதில் இரும்புக் கரமாக செயல்படுகின்றோம், என்று கூறினார்.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடங்கியது குறித்தான கேள்விக்கு,
”எந்த சூழல் வந்தாலும் அதனை எதிர்க்க கூடிய ஆற்றல் முதலமைச்சருக்கு உண்டு. இந்த இயக்கம் மக்களை நம்பி இருக்கக்கூடிய இயக்கம் மக்களோடு பயணிக்க கூடிய இயக்கம் என தெரிவித்துள்ளாா்.
திமுகவின் ஊழலை மறைக்க தான் எஸ்.ஐ.ஆரை திமுக எதிர்க்கிறது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியது குறித்தான கேள்விக்கு, எஸ்.ஐ.ஆர் மட்டுமல்ல, ED, CBI போன்ற அனைத்து விசாரணைகளையும் திமுக உறுதியுடன் எதிர்கொள்ளும். முருகனுக்கு தோல்வி பழக்கமாகி விட்டது,என சாடினாா்.
சபரிமலையில் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்கு தமிழக பக்தர்களுக்கு என்னென்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு,
”சபரிமலை யாத்திரைக்கும் முன்பாக 25 லட்சம் பிஸ்கட்களை கேட்டு இருக்கிறார்கள். வருகின்ற 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் முதல் கட்டமாக அனுப்ப இருக்கிறோம். சபரிமலையில் திருவாங்கூர் தேவஸ்தானத்தில் 24 மணி நேரமும் தமிழக பக்தர்கள் உதவி தேவைப்பட்டால் சபரிமலையில் அதற்கான அலுவலகத்தை ஏற்படுத்த இருக்கிறோம்.
கீழே பம்பையில் அப்பல்லோ, காவேரி, ராமச்சந்திரா மருத்துவமனை துணையோடு கார்டியோ வேன் முழு நேரமும் மண்டல காலங்களில் நிறுத்துவதற்கான அனுமதி கோரி இருக்கிறோம். அதனை கண்காணிக்க துறையின் சார்பாக குழுவை அமைத்து இருக்கிறோம். சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தமிழக பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கேரளா அரசின் துணையோடு தமிழக அரசு மேற்கொள்ளும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளாா்.”
முதலமைச்சர் கரத்தை வலுப்படுத்த மேலும் பலர் திமுகவில் இணைவார்கள் என நீங்கள் கூறியதற்கு பிறகு மனோஜ் பாண்டியன் நேற்று திமுகவில் இணைந்துள்ளார் எனவும் மேலும் பலர் வருவார்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, முதல்வரின் பணிகளும் மக்களுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் உண்மையான மக்கள் நலனுக்காகவே. ”Wait and see எனவும், மேலும் பலர் வந்து முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்துவார்கள் என்றும், அமைச்சர் சேகர் பாபு பதில் அளித்துள்ளாா்.”


