திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் யார்?
திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற திமுக – அதிமுக வேட்பாளர்கள் யார் என்ற தகவல் தற்போது வெளியில் வரத்தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ளது. கடந்த 2019 ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றம் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் பாஜக கூட்டணி 353 தொகுதிகள் கைப்பற்றி நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமரானார். காங்கிரஸ் கட்சி 53 தொகுதிகளை கைப்பற்றி பரிதாபமாக தோல்வியை தழுவியது.

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் கும்மிடிபூண்டி, பொன்னேரி, மாதவரம், ஆவடி, திருவள்ளுர் மற்றும் பூந்தமல்லி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடகியது. அதில் 19 லட்சத்து 20 ஆயிரத்து 372 வாக்காளர்கள் உள்ளனர். திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெயக்குமார் போட்டியிட்டார். அவர் 7 லட்சத்து 67 ஆயிரத்து 292 வாக்குகள் பெற்று அபார வெற்றிப் பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் டாக்டர் வேணுகோபால் போட்டியிட்டு 4 லட்சத்து 10 ஆயிரத்து 337 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் 3 லட்சத்து 56 ஆயிரத்து 955 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.
2024 ஏப்ரல், மே மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரிகள் என்று அந்தக் கூட்டணி தொடரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் வெற்றிப் பெற்று தற்போது எம்.பி. யாக உள்ள டாக்டர் ஜெயக்குமார், திருவள்ளூரில் அரசு மெடிக்கல் காலேஜ் அமைவதற்கு காரணமானவராக இருந்தார். மேலும், நன்கு படித்தவர், அவருக்கென்று தனி கோஷ்டியை அமைத்துக் கொள்ளாதவர். கெட்டப் பெயர் எதுவும் இல்லாதவர். மீண்டும் அவருக்கே வாய்ப்பு இருப்பதாக நமது சோர்ஸ் தெரிவிக்கிறது. மேலும் காங்கிரஸ் கட்சி தற்போது எம்.பி. யாக இருக்கும் தொகுதிகளை விட்டுக் கொடுக்காமல் திமுக தலைமையிடம் மீண்டும் கேட்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் டாக்கர் ஜெயக்குமார், மீண்டும் வேட்பாளராக நிறுத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் டெல்லியிலும் ராகுல் காந்தியிடம் நெருக்கம் இருந்து வருவதால் அவருக்கே சீட் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் ஆணித்தரமாக தெரிவிக்கின்றனர்.
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக விற்கு திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்குவதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரியவருகிறது. அதிமுக நேரடியாக களம் இறங்க தயாராகி வருகிறது. இதுகுறித்து அதிமுக தலைமையில் உயர் பதவியில் இருந்து வரும் ஒருவரிடம் பேசும்போது, திருவள்ளூர் தொகுதியில் ஏற்கனவே டாக்டர் வேணுகோபால் இரண்டு முறை எம்.பி.யாக இருந்துள்ளார். அவர் மீது சிறிய அளவில் கூட குற்றச்சாட்டு வைக்க முடியாது. அந்த அளவிற்கு நல்லப் பெயர் எடுத்துள்ளார். திருவள்ளூர் தொகுதி அதிமுகவிற்கு செல்வாக்கு உள்ள தொகுதி என்றும் அதிமுகவே நேரடியாக போட்டியிடும் என்றும் அவர் கூறினார்.
மேலும், வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதில் கூறாவிட்டாலும் பொன்னேரி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சிரினியம் பலராமனின் பெயரை மறைமுகமாக தெரிவித்தார். இதுகுறித்து மேலும் விசாரித்தபோது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் “குட் புக்கில்” உள்ளவர் சிரினியம் பலராமன். அவர் ஏற்கனவே மாவட்ட செயலாளராக இருந்து மாவட்டம் முழுவதும் நல்ல பரிட்சியம் ஆனவர். அதிமுகவில் உள்ள நல்ல மனிதர்களில் அவரும் ஒருவர். பொன்னேரி, கும்முடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை பகுதிகளில் அவருக்கென்று செல்வாக்கும், மரியாதையும் இருந்து வருகிறது. அதிமுகவில் சிரினியம் பலராமனுக்கே சீட் என்று ஏறக்குறைய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் ஜெயக்குமாருக்கும், அதிமுக வேட்பாளர் சிரினியம் பலராமனுக்கும் நேரடி போட்டி என்றால் மீண்டும் அதிமுக கொடி உயருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பது தெரியவருகிறது.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
---|---|---|---|---|---|
கே. ஜெயக்குமார் | ![]() | இந்திய தேசிய காங்கிரசு | 3,199 | 7,67,292 | 54.49% |
பொ. வேணுகோபால் | ![]() | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 1,063 | 4,10,337 | 29.14% |
எம். லோகரெங்கன் | ![]() | மக்கள் நீதி மய்யம் | 176 | 73,731 | 5.24% |
எம். வெற்றிசெல்வி | ![]() | நாம் தமிழர் கட்சி | 162 | 65,416 | 4.65% |
பொன். ராஜா | ![]() | அமமுக | 75 | 33,944 | 2.41% |
நோட்டா | – | – | 100 | 18,275 | 1.3% |
2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்கு விபரம்.