Homeசெய்திகள்அரசியல்அதிமுக-வில் சசிகலா, டிடிவி தினகரன் இணைய வாய்ப்பு? பொருத்திருந்து பாருங்கள் என முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன்...

அதிமுக-வில் சசிகலா, டிடிவி தினகரன் இணைய வாய்ப்பு? பொருத்திருந்து பாருங்கள் என முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பரபரப்பு பேட்டி! ​

-

- Advertisement -

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் மீண்டும் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். மேலும், தவெக-விற்கு சென்ற சில முன்னாள் அமைச்சர்கள் வேதனையில் இருப்பதாகவும், அவர்கள் மீண்டும் அதிமுகவிற்கே திரும்புவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.அதிமுக-வில் சசிகலா, டிடிவி தினகரன் இணைய வாய்ப்பு? பொருத்திருந்து பாருங்கள் என முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பரபரப்பு பேட்டி!  ​

​ஈரோட்டில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ அளித்த பரபரப்பு பேட்டி வருமாறு,

we-r-hiring

​பிரிந்து சென்றவர்கள் இணைய வாய்ப்பு
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ‘பிரிந்து சென்றவர்களை இணைப்போம்’ என்று பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களில் யார் யாரெல்லாம் மீண்டும் வர விரும்புகிறார்களோ, அவர்கள் அனைவரையும் கட்சியில் சேர்த்துக்கொள்வோம்” என்றார். ​தொடர்ந்து, சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் இணைவார்களா? அதுகுறித்து பேச்சுவார்த்தை ஏதும் நடக்கிறதா? எனக் கேட்டதற்கு, “அவர்கள் மீண்டும் கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளது. அதுதொடர்பாகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் இறுதி முடிவெடுப்பார். நீங்கள் சற்று பொறுத்திருந்து பாருங்கள், அதற்கான விடை உங்களுக்குத் தெரியவரும்” என்று சஸ்பென்ஸ் வைத்தார்.

அதிமுக-வில் சசிகலா, டிடிவி தினகரன் இணைய வாய்ப்பு? பொருத்திருந்து பாருங்கள் என முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பரபரப்பு பேட்டி!  ​

​தவெக சென்றவர்கள் வேதனையில் உள்ளனர்
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) சென்றுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குறித்துப் பேசிய அவர், “ஆட்சி மாற்றம் ஏற்படும் பொழுது சிலர் கட்சி மாறுவது வழக்கமான ஒன்றுதான். சில முன்னாள் அமைச்சர்கள் வேண்டுமானால் சுயநலத்திற்காகச் சென்றிருக்கலாம், ஆனால் அதிமுக தொண்டர்கள் யாரும் தவெக-விற்குச் செல்லவில்லை. ​அதிமுக தலைமையுடன் எந்தக் கருத்து மோதலும் இல்லாத நிலையிலும், தாங்கள் செய்த தவறுகளை மறைக்கவும், வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தங்கள் சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ளவுமே அவர்கள் கட்சி மாறிச் சென்றுள்ளனர். தற்போது தவெக-விற்குச் சென்ற அந்த முன்னாள் அமைச்சர்கள் பலரும் மனம் வெந்து, கடுமையான வேதனையுடன் உள்ளனர். அவர்கள் மீண்டும் அதிமுகவிற்கே திரும்பி வர அதிக வாய்ப்புள்ளது” என்றார்.

​போக்குவரத்து தொழிலாளர்கள் பழிவாங்கல்
தொடர்ந்து தவெக அரசு மீது குற்றம் சாட்டிய கே.சி.கருப்பணன், “தவெக அரசால் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பழிவாங்கப்பட்டு வருகிறார்கள். கோபிசெட்டிபாளையம் மற்றும் கவுந்தப்பாடி பகுதிகளில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள், கோவை அன்னூர் போன்ற தொலைதூரப் பகுதிகளுக்குப் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்தப் போக்குவரத்துத் தொழிலாளர்களை மீண்டும் பழைய இடத்திற்கே கொண்டு வர அதிமுக சார்பில் சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

“விஜய் ஒன்றும் அவதார புருஷரோ, கடவுளோ அல்ல!” – அதிமுக எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு!

MUST READ