spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடிகளில் ஒருவருக்கு மட்டும் பிரேத பரிசோதனை மற்றவருக்கு உறவினர் இல்லாததால் தாமதம்

என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடிகளில் ஒருவருக்கு மட்டும் பிரேத பரிசோதனை மற்றவருக்கு உறவினர் இல்லாததால் தாமதம்

-

- Advertisement -

சோழவரம் அருகே நேற்று என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட 2 ரவுடிகளின் உடற்கூறு ஆய்வு இன்று நடைபெற உள்ளது.

பூதூர் அடுத்த மாரம்பேடு பகுதியில் நேற்று காலை ரவுடிகள் முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஸ்டான்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ரவுடிகளின் சடலங்களை பொன்னேரி பொறுப்பு  கோட்டாட்சியர் கௌசல்யா நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் விசாரணை ஈடுபட்டார்.

we-r-hiring

என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடிகளில் ஒருவருக்கு மட்டும் பிரேத பரிசோதனை மற்றவருக்கு உறவினர் இல்லாததால் தாமதம்

சண்டே சதீஷ்  அவரது மாமனார் மற்றும் பாட்டி உடலை வாங்க  வந்திருந்ததால் அவர்கள் முன்னிலையில் பொன்னேரி பொறுப்பு கோட்டாட்சியர் கௌசல்யா விசாரணை மேற்கொண்டார். இதனை அடுத்து சண்டே சதீஷின் உடல் மட்டும் இன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

முத்து சரவணனுக்கு  உறவினர்கள் யாரும் வராததால் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படாது என போலீசார் தகவல் தெரிவித்தனர். சண்டே சதீஷ் உடல் மட்டும் பிரேத பரிசோதனை முடித்து நேராக காசிமேடு மயானத்திற்கு கொண்டு சென்று உடல் எரிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

MUST READ