spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விஜய்காக ரஜினியை எதிர்த்தார் சீமான்... அதே விஜய் எங்களையே சீண்டுகிறார்: களஞ்சியம் வேதனை

விஜய்காக ரஜினியை எதிர்த்தார் சீமான்… அதே விஜய் எங்களையே சீண்டுகிறார்: களஞ்சியம் வேதனை

-

- Advertisement -

சமீபகாலம் வரை விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வந்த சீமான் இப்போது அவரை கடுமையாக சாடுவது எதனால் என நாம் தமிழர் கட்சியில் அங்கம் வகிக்கும் இயக்குநர் களஞ்சியம் தெரிவித்துள்ளார்.

“விஜய், ஒன்று திராவிடம் அல்லது தமிழ் தேசியம் ஏதாவது ஒரு கொள்கைக்கு வரவேண்டும். தம்பி என்ற உறவு வேறு. கொள்கையில் முரண் வேறு. என்னைப் பெற்ற தாய் தந்தையராகவே இருந்தாலும், எங்களுடைய கொள்கைக்கு எதிராக இருந்தால், எதிரி எதிரிதான் என்று சாடிய அவர், விஜயின் பேச்சை கூமுட்டைத்தனமானது’’ என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து இருந்தார்.

we-r-hiring

இந்த நிலையில், சீமானுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் அவரின் முந்தைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதற்கிடையே, நடிகர் விஜய்க்கு எதிராகவும், ஒரு நடிகர் அரசியலுக்கு வருவதின் வாயிலாக அவர் மக்களை எந்தளவுக்கு முட்டாளாக்குகிறார் என்பது குறித்தான வீடியோக்களும் சமூகவலைதளங்களில் உலா வருகின்றன.

Rajinikanth and Others At The Inauguration of MGR Statue

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இயக்குநர் மு.களஞ்சியம், ‘‘நடிகர் விஜய் 2018ல் இருந்து 20 முறை சீமானை சந்தித்து தான் அரசியலுக்கு வரப்போவதாக ஆலோசனை கேட்டார். விஜய்க்காக நடிகர் ரஜினியை சீமான் கடுமையாக சாடினார். ஆனால் இப்போது விஜய் எங்களை சீண்டுவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ