பள்ளியில் 10ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை -3 பேர் கைது
முசிறி அருகே தொட்டியத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் தோளூர்பட்டியை கிராமத்தை சேர்ந்த கொத்தனார் கோபி என்பவரது மகன் மெளலீஸ்வரன் (15) பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று பள்ளி வளாகத்தில் திடலில் அமர்ந்து மாணவர்கள் படித்துள்ளனர். அப்போது சக மாணவர்கள் மெளலீஸ்வரனை கற்கள் கொண்டு தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மெளலீஸ்வரன், மயக்கமடைந்ஹ்டார்.

இதையடுத்து ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மாணவன் மெனலீஸ்வரன் கொண்டு செல்லப்பட்டார். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மெளலீஸ்வரனின் பெற்றோர்கள். உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு மாணவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து 3 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பணியின் பொது கவனக்குறைவாக இருந்ததாக தலைமையாசிரியர் ஈஸ்வரி, ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியை வனிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.