Homeசெய்திகள்தமிழ்நாடுநலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் மூலம் இதுவரை 13 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் - அமைச்சர்...

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் மூலம் இதுவரை 13 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற 844 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில், சுமார் 13 லட்சம் பேர் மருத்துவ பயனுற்றுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சிறப்பு மருத்துவ முகாம்

we-r-hiring

இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீரிய சிறப்புமிகு திட்டமான “நலம் காக்கும் ஸ்டாலின்” ஒவ்வொரு வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை 1256 இடங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, அதன்படி இன்று 21 ஆவது வாரமாக தமிழ்நாட்டில் 44 முகாம்கள் மிகசிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன் மூலம் இன்றைக்கு இறுதியாக முடிவுற்று பயன்பெற்ற ‘மருத்துவப் பயனாளர்களின் ’எண்ணிக்கை 65,147 ஆகும் என்றும் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இன்றோடு 21 வாரங்களாக 844 இடங்களில் நடத்தப்பட்டு 13 லட்சத்து 55 பேர் மருத்துவ பயனுற்றுள்ளனர் என்பதை அறிவிக்க மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ