spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு16 வகை உணவுகளை 20 நிமிடங்களில் சாப்பிட்டால் பரிசு!

16 வகை உணவுகளை 20 நிமிடங்களில் சாப்பிட்டால் பரிசு!

-

- Advertisement -

 

16 வகை உணவுகளை 20 நிமிடங்களில் சாப்பிட்டால் பரிசு!

we-r-hiring

ஈரோடு அருகே புதிய உணவகத் திறப்பு விழாவையொட்டி, சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது.

நான்காவது முறையாக இணைகிறதா ‘ராட்சசன்’ பட காம்போ?

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்துள்ள குன்னத்தூர் சாலையில் பாபு என்பவர் புதிதாக உணவகம் திறந்துள்ளார். உணவகத் திறப்பு விழாவையொட்டி, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது.

500 ரூபாய் கட்டணம் செலுத்தி பிரியாணி, மீன், முட்டை, நாட்டுக்கோழி, வாத்துக்கறி என 16 வகையான உணவுகளை சாப்பிடுவதற்காகப் போட்டியாளர்கள் பலர் பங்கேற்றனர். 20 நிமிடங்கள் 16 வகையான உணவுகளைச் சாப்பிடும் நபர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 1,000, இரண்டாம் பரிசாக ரூபாய் 800, மூன்றாம் பரிசாக ரூபாய் 500 அறிவிக்கப்பட்டிருந்தது.

இணையத்தில் லீக் ஆகும் தனுஷ் 51 பட காட்சிகள்!

போட்டியாளர்களில் சிலர் போட்டியில் வெற்றி பெறாததாலும், வயிறு நிறைய சாப்பிட்டு ஆறுதல் அடைந்தனர். உணவகத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த போட்டி நடத்தப்பட்டதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ