spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு1,933 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

1,933 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

-

- Advertisement -

 

1,933 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

we-r-hiring

மாநகராட்சி, நகராட்சி பணிகளில் காலியாக உள்ள 1,933 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்ற வரும் பிப்ரவரி 09- ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். 1,933 காலிப் பணியிடங்களுக்கு வரும் பிப்ரவரி 09- ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் மார்ச் 12- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

www.tnmaws.ucanapply.com என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாநகராட்சி உதவி பொறியாளர் முதல் துப்புரவு ஆய்வாளர் வரை 16 பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது”. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய எலக்ட்ரானிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், இளம்பெண்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வி தகுதி, விண்ணப்ப கட்டணம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு http://www.tnmaws.ucanapply.com/ என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று தெரிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ