spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு2016-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு விடைத்தாள் மோசடி வழக்கு - விரைந்து  முடிக்க உத்தரவு

2016-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு விடைத்தாள் மோசடி வழக்கு – விரைந்து  முடிக்க உத்தரவு

-

- Advertisement -

2016-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு விடைத்தாள் மோசடி வழக்கு - விரைந்து  முடிக்க உத்தரவுகடந்த 2016-ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வுக்கான விடைத்தாளை மாற்றி மோசடி வழக்கு விசாரணையை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டு என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2016-ல் குரூப் 1 தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் பங்கேற்ற ராம்குமார் என்பவர் விடைத்தாளை மாற்றி முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவிய நபரான கருணாநிதி மற்றும் டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இந்த வழக்கில் உள்ள கருணாநிதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

we-r-hiring

2016-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு விடைத்தாள் மோசடி வழக்கு - விரைந்து  முடிக்க உத்தரவு

அதில், ‘விடைத்தாளை மாற்றிய விவகாரத்தில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. ராம்குமார் நடத்திய சிசிடிவி காமிரா பொருத்தும் நிறுவனத்தில் மாத ஊதிய அடிப்படையில் பணிபுரிந்தேன். ராம்குமார் எழுதி கொடுக்கச் சொன்னதை எழுதி கொடுத்தேன். ஆனால், அவர் குரூப்1 தேர்வுக்கான விடைத்தாளில் முறைகேடு செய்வார் என எனக்குத் அப்போது தெரியாது. போலீஸார் முறையாக விசாரணை நடத்தாமல் என் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே கீழமை நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. விசாரனையின் போது அரசு குற்றவியல் வழக்கறிஞர் சி.இ.பிரதாப் ஆஜராகி, “இந்த வழக்கில் இதுவரை 65 சாட்சிகள் சேர்க்கப்பட்டு, அதில் 10 பேரிடம் சாட்சி விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

பட்டியலின மக்களுக்கான சிறப்பு நிதியை முறையாக வழங்க உத்தரவு -சென்னை உயர் நீதிமன்றம்

அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து, விசாரணையை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.

MUST READ