ஆவடி அருகே கால்வாய் நீரில் மூழ்கி, தாய் கண் முன்னே 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அருகே உள்ள ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள் பாண்டி(28). இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு 3 வயது ஆண் குழந்தை உள்ளது. அருள் பாண்டியும், கவிதாவும் சிறிய சரக்கு வாகனத்தில் சென்ரு பழைய இரும்பு மற்றும் பேப்பர் வாங்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கவிதா, ஆலத்தூர் வழியே செல்லும் கிருஷ்ணா கால்வாயில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது குழந்தை பிரணவ்-ஐயும் அழைத்துச் சென்றிருக்கிறார்.
கவிதா குளித்துக்கொண்டிருந்த போது, குழந்தை எதிர்பாராத விதமாக கால்வாயில் அடித்து செல்லப்பட்டுள்ளது. அப்போது கால்வாயில் மூழ்கி குழந்தை பிரணவ், மூச்சுத்திணறி உயிரிழந்தது.. இந்த சம்பவம் குறித்து முத்தா புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயுடன் குளித்துக்கொண்டிருந்த 3 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.