Homeசெய்திகள்தமிழ்நாடுராஜீவ் காந்தி மருத்துவமனையில் 60 படுக்கைகள் தயார்

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 60 படுக்கைகள் தயார்

-

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 60 படுக்கைகள் தயார்

ஒடிசா ரயில் விபத்தில் படுகாயம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 55 பேர் சென்னை அழைத்து வரப்படுகின்றனர்.

தடம் புரண்ட ரயில் பெட்டிகள் எவை எவை?
Photo: ANI

கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசாவில் பயங்கர விபத்திற்குள்ளாகி 230 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது நாட்டையும், நாட்டு மக்களையும் உலுக்கி அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. மனித உயிர்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ள இந்த படுமோசமான விபத்தில் 900-த்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Major medical college hospitals will have follow-up clinics - The Hindu

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் படுகாயமடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த 55 பேர் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவர அரசு ஏற்பாடு செய்துள்ளது. அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளது. விமானத்தில் சென்னை வந்தததும் நேராக ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட உள்ளனர். அங்கு சிகிச்சை பெற 60 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

MUST READ