அரசு எந்த நலத்திட்டத்தை கொண்டுவந்தாலும் குறை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் கிளம்பி வந்துவிடும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவில் பெரிபெரியாங்குப்பம், முத்தண்டி குப்பம் கிராமங்கள் உள்ளது. இந்த இரு கிராமங்களையும் நெடுஞ்சாலை பிரிக்கிறது. இரு பகுதியிலும் அந்தந்த ஊர்களுக்கான பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இந்த நிலையில் பெரிபெரியாங்குப்பம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு பதிலாக புதிய பேருந்து நிறுத்தத்தை கட்ட மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்து அதற்கான நிதியையும் ஒதுக்கியது.
இந்நிலையில், புதிய பேருந்து நிறுத்தத்திற்கு பெரிபெரியாங்குப்பம் என்ற பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று உத்தரவிடக்கோரி பெரிபெரியாங்குப்பத்தை சேர்ந்த பழனி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் பெரிபெரியாங்குப்பம் கிராம பஞ்சாயத்திற்குள் வரும் முத்தண்டிகுப்பம் பெயரில்தான் பேருந்து நிறுத்தம், காவல் நிலையம் போன்றவை உள்ளன. இதனால், பெரிபெரியாங்குப்பம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், அரசு எந்த நல திட்டங்களையும், அடிப்படை வசதிகளையும் கொண்டு வந்தாலும் அதை குறை சொல்வதற்காகவ ஒரு கூட்டம் வந்துவிடும். உடனே நீதிமன்றத்திற்கும் வந்துவிடுவார்கள் என்றும், வேலைவெட்டிக்கு செல்லாமல் இதுபோன்ற விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். சமூக வலைத்தளங்கள் தற்போது அவர்களுக்கு மிகவும் உதவுகிறது என்று அதிருப்தி தெரிவித்ததுடன் இந்த வழக்கில் மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்போவதாக எச்சரித்தனர். இதைக்கேட்ட மனுதாரர் தரப்பு மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதையடுத்து, மனுவை வாபஸ் பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
1000-த்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு… ரெடியா இருங்க… முதல்வர் அதிரடி அறிவிப்பு…


