spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகாவல் நிலையங்களில் சி.சி.டி.வி கேமராக்களை கண்காணிக்க தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும் -...

காவல் நிலையங்களில் சி.சி.டி.வி கேமராக்களை கண்காணிக்க தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்

-

- Advertisement -

காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி  கேமராக்களை கண்காணிக்க தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.காவல் நிலையங்களில் சி.சி.டி.வி  கேமராக்களை கண்காணிக்க தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும் - உச்சநீதிமன்றம்காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்படுவர்கள் குற்றவாளி என்று உறுதியாகும் முன்னதாகவே மர்மமான முறையில் அங்கேயே இறந்துவிடுகிறனர். இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில், நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,”சிசிடிவி கேமரா பொருத்தும் விவகாரத்தில் மாவட்ட ரீதியாக குழு அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த 2021-ம் ஆண்டு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், மேற்கண்ட விவகாரத்தில் முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும், காவல் நிலைய மரணங்கள் தொடர்ச்சியாக நடப்பது தொடர்பாக தனியார் செய்தித்தாளில் வெளியான செய்தி அடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது மட்டுமில்லாமல், சிசிடிவி பொருத்தும் விவகாரத்தில் காவல் துறை, சி.பி.ஐ,  அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட  விசாரணை அமைப்புகள் நிலை அறிக்கை அளிக்க  கடந்த 4ம்-தேதி உத்தரவிட்டிருந்தது.

we-r-hiring

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஒரு காவல் நிலைய மரணம் தொடர்பான வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் சித்தார்த் தேவ்,”சிசிடிவி பொருத்தும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவை ஒருசில மாநிலங்கள் பின்பற்றவில்லை. குறிப்பாக என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய விசாரணை அமைப்புகள் இதற்கு இணங்காமல் இருந்து வருகிறது என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள்,” இந்த விவகாரத்தில் இருக்கும் பிரச்சனை என்பது மேற்பார்வை பற்றியது ஆகும். இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாமல் இருக்கலாம், நாளை நடக்கும் ஒரு சம்பவத்தில் விசாரணை அதிகாரிகள் கேமராக்களை அணைக்கலாம் அல்லது வேறு பக்கம் திருப்பி வைக்கலாம். எங்களை பொருத்தமட்டில் மனித தலையீடு இல்லாத ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைக்க வேண்டும் என  ஆலோசித்துக்கொண்டு இருக்கிறோம். குறிப்பாக காவல் நிலையத்தையும் சுயாதீன நிறுவனம் ஆய்வு செய்ய வேண்டும்.

மனித தலையீடு இல்லாமல் சிசிடிவி காட்சிகள் கண்காணிக்கப்படுவதற்கான வழிமுறையை வழங்க ஐ.ஐ.டியை நிறுவனத்தை ஈடுபடுத்துவது குறித்து நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். காவல் நிலையங்களில் மரணம் மட்டுமல்ல, சித்திரவதை மற்றும் அதிகார துஷ்பிரயோகமும் கூட நடக்கிறது. இவை அனைத்திற்கும் அது தீர்வாக காண வேண்டும். எனவே சி.சி.டி.வி பொருத்தும் விவகாரத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்யாத மாநிலங்கள் அடுத்த 3 நாட்களில் அதனை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு மீதான உத்தரவை வரும் 22-ம் தேதி பிறப்பிப்பதாகவும் உத்தரவிட்டனர்.

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் – ஓரணியில் தமிழ்நாடு மூலம் இணைந்தவர்கள் உறுதிமொழி

MUST READ