Homeசெய்திகள்தமிழ்நாடுபைக் மீது லாரி மோதி விபத்து..பள்ளி சென்ற சகோதிரிகள் பலி…

பைக் மீது லாரி மோதி விபத்து..பள்ளி சென்ற சகோதிரிகள் பலி…

-

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி  பல்ல கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பூபேஷ்-சுமதி தம்பதியினர்.இவர்களுக்கு கனிஷ்கா மற்றும் சஸ்விகா எனற இரு மகள்கள் உள்ளனர்.இருவரும் விஜயமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

கனிஷ்கா ஆறாம் வகுப்பும்,சஸ்விகா இரண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.இன்று காலை இருவரையும்  அவர்களின் தாய்மாமனான தங்கராஜ் தனது பைக்கில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

பல்ல கவுண்டம்பாளையம் அருகே கோவை-சேலம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த லாரி ,பைக்கின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

பைக்கிலிருந்து மூவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். கீழே விழுந்ததில் லாரியில் சிக்கிய இரு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பலத்த காயமடைந்த தங்கராஜ் தனியார் மருத்துவமனையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் லாரி டிரைவரான செல்வராஜை கைது செய்துள்ளனர். சகோதிரிகள் இருவருர் உயிரிழந்தச்  சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ