Homeசெய்திகள்தமிழ்நாடுபுதுக்கோட்டை நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் விபத்து- பலி எண்ணிக்கை 3 ஆனது

புதுக்கோட்டை நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் விபத்து- பலி எண்ணிக்கை 3 ஆனது

-

புதுக்கோட்டை நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் விபத்து- பலி எண்ணிக்கை 3 ஆனது

புதுக்கோட்டை அருகே கடந்த 30-ம் தேதி நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறை வெடித்து சிதறிய விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து பேரில் ஏற்கனவே இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இன்று ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

வெடி விபத்து

புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடியில் நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறையில் கடந்த 30-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் வெடிப்பொருட்கள் வெடித்து சிதறிய சம்பவத்தில் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட வெடி பட்டறையின் உரிமையாளர் கோவில்பட்டியைச் சேர்ந்த வைரமணி மற்றும் கோவில்பட்டியைச் சேர்ந்த தொழிலாளர்கள் குமார் திருமலை வீரமுத்து வெள்ளனூரை சேர்ந்த சுரேஷ் ஆகிய ஐந்து தொழிலாளர்கள் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோவில்பட்டியைச் சேர்ந்த வீரமுத்து(31), திருமலை (30) ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி கடந்த இரு தினங்களுக்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை: நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் விபத்து; தரைமட்டமான கட்டடம்... 5 பேர் படுகாயம்!

இந்நிலையில் இன்று விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த வெள்ளனுரை சேர்ந்த சுரேஷ் (35) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறை‌ வெடித்து சிதறிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் தற்போது வரை உயிரிழந்துள்ள வீரமுத்து, திருமலை, சுரேஷ் ஆகியோரின் குடும்பத்தினருக்கும் மேலும் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

MUST READ