spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"அ.தி.மு.க.வின் முடிவை வரவேற்கிறேன்"- சீமான் ட்வீட்!

“அ.தி.மு.க.வின் முடிவை வரவேற்கிறேன்”- சீமான் ட்வீட்!

-

- Advertisement -

 

Seeman - சீமான்

we-r-hiring

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என்று அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக அறிவித்திருந்தார்.

மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவன் காவல் நிலையத்தில் சரண்

இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப்பக்கத்தில், “பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவித்திருக்கும் அதிமுகவின் முடிவை முழுமையாக வரவேற்கிறேன். மிகத் தாமதமான முடிவென்றாலும், சரியானதொரு முடிவு!

காங்கிரசு, பா.ஜ.க. எனும் இரு இந்திய ஒன்றியக் கட்சிகளுமே தமிழ்நாட்டுக்கும், தமிழினத்திற்கும் எதிரிகள்தான். அவை தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை, உணர்வு, உயிர், நிலம், வளம், அதனுடையப் பாதுகாப்பு, எதிர்கால நலவாழ்வு என எல்லாவற்றிற்கும் எதிரானவையே!

கொரட்டூரில் அரிசி வியாபாரம் செய்வது போல் விளம்பர பலகை வைத்து குட்கா வியாபாரம் செய்தவர் கைது

பா.ஜ.க.வுடனான உறவைத் துண்டித்திருக்கும் இந்நிலைப்பாட்டில் அ.தி.மு.க. இறுதிவரை உறுதியாக இருக்குமானால் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ