spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஈபிஎஸ்-க்கு எதிராக ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈபிஎஸ்-க்கு எதிராக ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

-

- Advertisement -

ஈபிஎஸ்-க்கு எதிராக ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கை அதிமுக ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திருப்பத்தூர் சாலையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்ததன் பேரில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

eps1

எம்ஜிஆர் ஜெயலலிதா அவர்களால் உருவாக்கப்பட்டு கட்டி காக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அடிப்படை சட்ட விதிகளை புறம்தள்ளி அதிமுகவை அபகரிக்க நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து அதிமுக ஓபிஎஸ் அணியினர் சிவகங்கை திருப்பத்தூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

we-r-hiring

prt

அதிமுக(ஓபிஎஸ் அணி) மாவட்ட கழக செயலாளர் அசோகன் தலைமையில் கழக கொள்கை பரப்பு செயலாளர் மருதுஅழகுராஜ் உள்ளிட்ட ஏராளமான பங்கேற்றுள்ளனர். 11 மணிக்கு துவங்கிய ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். முன்னதாக கழக நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பதவி விலக வலியுறுத்தியும் பேசி வருகின்றனர் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

MUST READ