- Advertisement -
அதிமுக பொதுக்குழு வழக்கு- நாளை மறுநாள் விசாரணை
அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கை நாளை மறுதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் முறையீடு செய்ததை ஏற்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளனர்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதி குமரேஷ் பாபுவின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.மனுக்களின் மீதான விசாரணைக்காக
இறுதி வாதங்களுக்கு ஏப்ரல் 20ம்தேதி தள்ளிவைக்கப்பட்டு உள்ள நிலையில், ஏப்ரல் 16ஆம் தேதி செயற்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒபிஎஸ் தரப்பில் அவசர முறையீடு செய்யப்பட்டது.


