spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகடனைப் பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை…தங்கம் தென்னரசு காட்டம்

கடனைப் பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை…தங்கம் தென்னரசு காட்டம்

-

- Advertisement -

தமிழகத்தின் மொத்த கடன் ரூ.9.21 லட்சம் கோடியாக உயர்ந்ததற்கான காரணங்களை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார்.கடனைப் பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை…தங்கம் தென்னரசு காட்டம்சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் தங்கம்தென்னரசு, 2020- 21 ஆண்டில்  அதிமுக ஆட்சி காலம் முடிவடைந்த போது, அவர்கள் விட்டுச்சென்ற கடனுக்கே இதுவரை 1.40 லட்சம் கோடி ரூபாய் வட்டி தெகையை மட்டுமே செலுத்தி வருகிறோம்.  2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்  தொடக்கத்தில் தமிழகத்தின் மொத்த கடன் ரூ. 1,01,349 கோடியாக இருந்தது. ஆனால், 2015-16 ஆம் ஆண்டில் அது  ரூ. ரூ.2,11,066 கோடியாக உயர்ந்தது. அதாவது கடன் 108 சதவீதம் உயர்வு.

அடுத்ததாக 2016-17 ல் இருந்து 2020-21 வரையிலான அதிமுக ஆட்சியின் இருதியில் தமிழகத்தின் கடன் ரூ.4,80,300 கோடியாக உயர்ந்தது. அந்த காலக்கட்டத்தில் கடன்  128 சதவீதமாக அதிகரித்தது.

we-r-hiring

நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தற்போதைய நிலவரப்படி மாநிலத்தின் மொத்த கடன் ரூ. ரூ.9.21 லட்சம் கோடியாக உள்ளது. இது 93 சதவீத உயர்வே ஆகும். எனவே கடனைப் பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை என்று அவர் கூறினாா்.

மேலும், தமிழகத்தின் கடன் உயர்வுக்கு நிதி நிர்வாகப் பிழை காரணமல்ல. மத்திய பாஜக அரசு தமிழகத்தை மாற்றந்தாய் மனப்பான்மையுடன் அனுகுவது தான இதற்கு காரணம். 5வது நிதிக்குழுவின் தற்போதைய 14வது நிதிக்குழு வரை மத்திய வரிகளில் தமிழகத்தின் பங்கு 32 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.  மத்திய அரசு வரிப்பங்கீட்டை முறையாக வழங்கியிருந்தால் தமிழகத்தின் கடன் சுமை குறைந்தது ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு குறைந்திருக்கும்” என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளாா்.

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’…. ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது?…. லேட்டஸ்ட் அப்டேட்!

MUST READ