
தனது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு காற்றில் இருந்து குடிநீர் உற்பத்திச் செய்யும் இயந்திரத்தை நடிகர் கமல்ஹாசன் வழங்கியுள்ளார்.
சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்குப்பதிவு விறுவிறு!

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது 69-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதற்காக, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு காற்றில் இருந்து குடிநீர் உற்பத்திச் செய்யும் ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள இயந்திரத்தை வழங்கிய கமல்ஹாசன், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “இது அரசியல் கடந்த, மனிதம் சார்ந்த நிகழ்ச்சி” என்று தெரிவித்தார்.


