spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு“என்.எல்.சி தரும் மின்சாரம் தேவையில்லை”- அன்புமணி ராமதாஸ் அதிரடி

“என்.எல்.சி தரும் மின்சாரம் தேவையில்லை”- அன்புமணி ராமதாஸ் அதிரடி

-

- Advertisement -

“என்.எல்.சி தரும் மின்சாரம் தேவையில்லை”- அன்புமணி ராமதாஸ் அதிரடி

அறிவிப்பே இல்லாமல் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற என்.எல்.சி. தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி கலந்துகொண்டார்.

Image

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து 66 ஆண்டுகள் ஆகியும் பட்டா இல்லை. கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. தேவையில்லை என விரிவான கடிதம் கொடுத்துள்ளேன். என்.எல்.சி. நிறுவனத்தால் கடலூர் மாவட்ட மக்கள் மூன்று தலைமுறைகளாக பாதிக்கப்பட்டுள்ளனர். 1989 ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே நிரந்தர பணி ஆணை வழங்கப்பட்டது. என்.எல்.சியால் சுமார் 1000 அடிக்கு கீழ் நீர்மட்டம் குறைந்துள்ளது.

we-r-hiring

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரமே போதுமானது. என்.எல்.சி. தரும் மின்சாரம் தேவையில்லை. நம்முடைய கடமை நல்ல காற்று, நீரை அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும், பொதுமக்களின் நிலங்களை கையகப்படுத்துவது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம். தமிழக எல்லையில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகையுடன் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது. இதை தமிழக அரசும், காவல்துறையும் வேடிக்கை பார்க்கின்றன.” எனக் கூறினார்.

MUST READ