ஸ்டெர்லைட்டைவிட என்.எல்.சியால் பிரச்சனைகள் அதிகம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட்டைவிட என்.எல்.சியால் பிரச்சனைகள் அதிகம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “கடலூர் மாவட்டத்தில் 8 அடிக்கு கிடைத்த நிலத்தடி நீர் என்.எல்.சி.வந்த பின் ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுவிட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட்டைவிட என்.எல்.சியால் பிரச்சனைகள் அதிகம். என்.எல்.சி நிலக்கரி சுரங்க விவகாரம் கடலூர் மட்டுமல்ல 5 மாவட்ட மக்களின் பிரச்சனை. மக்கள் பாதிப்படைய வேண்டும் என்பதற்காக முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படவில்லை. கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. உள்ளதால் எடுத்துரைக்கவே முழு அடைப்பு போராட்டம். என்.எல்.சி நிலக்கரி சுரங்க விவகாரம் கடலூர் மட்டுமல்ல 5 மாவட்ட மக்களின் பிரச்சனை.

தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தபின் வேகவேகமாக நிலங்களை கையகப்படுத்துவது ஏன்? என்.எல்.சிக்காக நிலம் கொடுத்த மக்கள் அனைவருக்கும் வேலை கொடுக்கப்படவில்லை.என்.எல்.சியால் காற்று மாசடைந்து ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய ஊதியத்துடன் வேலை கொடுப்பதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.


