Homeசெய்திகள்தமிழ்நாடுஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை

ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை

-

ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை

ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சென்னை, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் அசோக் என்பவரது வீடு உள்ளிட்ட ஆறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்று (ஜூன் 13) காலை 09.00 மணி முதல் அதிரடியாக சோதனை நடத்தி வந்தனர். மேலும், சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். 17 மணி நேர சோதனைக்கு பிறகு நள்ளிரவில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ரத்தம் அழுத்தம், நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து இன்று பிற்பகலில் அஞ்சியோகிராம் செய்யப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

File Photo

விசாரணை என்ற பெயரில் செந்தில் பாலாஜியை வீட்டிற்குள்ளேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் அடைத்து வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செந்தில் பாலாஜியை பார்க்க உறவினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்கள் யாரையுமே அமலாக்கத்துறை அனுமதிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

MUST READ