ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே ஆன்லைன் ரம்மியால் பாதிக்கப்பட்ட 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தும் தமிழக ஆளுநர் அலட்சியம் காட்டுவதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த மருத்துவமனை ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவெறும்பூரை சேர்ந்த ரவிசங்கர், துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் பணியாற்றிவருகிறார். அதிகளவு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஏற்கனவே ஆன்லைன் ரம்மியால் 41 பேர் தற்கொலை செய்துள்ள நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


