இரண்டாவது மாடியில் நின்ற தாயின் பிடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை குடியிருப்பு வாசிகளே பத்திரமாக மீட்டனர். சென்னையை அடுத்த ஆவடியில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
சித்த மருத்துவர், அவரது மனைவி வீடு புகுந்து படுகொலை!
தற்போது அதிகமாக பகிரப்பட்டு வரும் அனைவரையும் பதறவைக்க காட்சி தான் இது. ஒரு கை குழந்தை குடியிருப்புப் பகுதியின் மேற்கூரையில் எந்த பிடியும் இன்றி தொங்கிக் கொண்டிருக்கிறது. குடியிருப்பு வாசிகளே துரிதமாகச் செயல்பட்டு குழந்தையை மீட்டனர்.
சென்னை ஆவடியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குழந்தையை வைத்துக் கொண்டு பால்கனியில் இருந்து துடைப்பத்தை எடுத்த போது, தாயின் பிடியில் இருந்து அந்த குழந்தை விழுந்துள்ளது.
நல்வாய்ப்பாக தகர மேற்கூரையில் எதோ ஒரு கம்பி குழந்தையின் சட்டையைப் பிடித்திருக்க, குழந்தை கீழே விளாமல் மேலேயே சிக்கிக் கொண்டது. இதனை அறிந்த குடியிருப்பு வாசிகள், குழந்தை கீழே விழுந்தாலும் அதனை பத்திரமாக மீட்பதற்காக, சிலர் பெட்ஜிட்டை கீழே பாதுகாப்பாகப் பிடித்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து, பால்கனிக்கு மேலே ஏறி குழந்தையை மீட்க சிலர் முயற்சித்தனர்.
உதகையில் மே 10- ஆம் தேதி முதல் மலர்கண்காட்சி!
பால்கனி தடுப்பு மீது ஏறிய ஒருவரை மற்றொருவர் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள, அந்த நபர் குழந்தையை மெதுவாக பத்திரமாக மீட்டார். இந்த மீட்பு முழுவதும் காணொளியாக வெளியாகி உள்ள நிலையில், குழந்தையை மீட்ட இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.