spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசித்த மருத்துவர், அவரது மனைவி வீடு புகுந்து படுகொலை!

சித்த மருத்துவர், அவரது மனைவி வீடு புகுந்து படுகொலை!

-

- Advertisement -

 

சித்த மருத்துவர், அவரது மனைவி வீடு புகுந்து படுகொலை!

we-r-hiring

சென்னை அருகே சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வீடு புகுந்து கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டனர்.

பழைய சப்பாத்தியில் ஒளிந்திருக்கும் நன்மைகள்!

கேரளாவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சிவன் நாயர் மற்றும் மத்திய அரசு பள்ளி ஆசிரியரான தனது மனைவி பிரசன்ன குமாரி உடன் திருவள்ளூர் மாவட்டம், மிட்டனமல்லியில் வசித்து வந்தார். இவர் வீட்டிலேயே சித்த மருத்துவம் பார்த்து வருகிறார். இவரது மகனும் சித்த மருத்துவம் பார்த்து வருகின்றனர். இவரது மகள் ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 28) மாலை மகன் வெளியே சென்றிருந்த நிலையில், சிகிச்சைப் பார்ப்பது போல வந்த நபர்கள், சிவன் நாயர் மற்றும் மனைவி பிரச்சன குமாரியை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இட்லி, தோசைக்கு இனிமே குடைமிளகாய் சட்னி செய்து பாருங்க!

நிகழ்விடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து, சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து காவல்துறையினர் கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். நகை, பணத்திற்காக கொலை நடந்ததா? வேறு ஏதேனும் காரணமா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ