spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"அத்திக்கடவு- அவிநாசி திட்டம் விரைவில் தொடக்கம்"- அமைச்சர் துரைமுருகன் பதில்!

“அத்திக்கடவு- அவிநாசி திட்டம் விரைவில் தொடக்கம்”- அமைச்சர் துரைமுருகன் பதில்!

-

- Advertisement -

 

"அத்திக்கடவு- அவிநாசி திட்டம் விரைவில் தொடக்கம்"- அமைச்சர் துரைமுருகன் பதில்!

we-r-hiring

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளாக இன்று (பிப்.13) காலை 10.00 கூடியது. அதைத் தொடர்ந்து, மறைந்த தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர்களுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதைத் தொடர்ந்து, பேரவை உறுப்பினர்கள் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர்.

வாய் பேச முடியாதவராக நடிக்கும் அனுபமா பரமேஸ்வரன்…. ‘சைரன்’ பட கதை இதுவா?

அதன் தொடர்ச்சியாக, சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைச் சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அந்த வகையில், பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “சேலம், ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரியில் நீர் ஏற்றம் செய்வதை விரைவுப்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “நீர் ஏற்றம் செய்யும் பணியை விரைவாக துரிதமாக இந்த அரசு செய்துக் கொடுக்கும்” என உறுதிப்படத் தெரிவித்தார்.

தளபதி லுக்கில் தெறிக்கவிடும் ரஜினி…..’தலைவர் 171′ படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான செங்கோட்டையன், அத்திக்கடவு- அவிநாசி திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “அத்திக்கடவு- அவிநாசி திட்டப் பணிகள் நிறைவடைந்து விரைவில் தொடக்க விழா நடைபெறும். நில உரிமையாளர்களுக்கு பணம் தராததால் குழாய் பதிக்கும் பணி ஒரு சில இடங்களில் நிறைவடையவில்லை. அரக்கன்கோட்டை கால்வாயில் ரூபாய் 40.55 கோடியில் பணிகள் முடிந்துள்ளன” என்று விளக்கம் அளித்துள்ளார்.

MUST READ