

தண்ணீர் அண்டாவில் விழுந்து மூழ்கி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி முரளி- கங்கம்மாள். இந்த தம்பதிக்கு மகள் மற்றும் ஒன்றை வயதில் ஜீவானந்தம் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவர் வழக்கம் போல் ஆட்டோ சவாரிக்கு சென்ற நிலையில், கங்கம்மாள் உடல்நிலை சரி இல்லாததால் மாத்திரை உட்கொண்டு தாய் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.

அப்பொழுது, விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, வீட்டின் அருகில் உள்ள குளியலறையில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்த அண்டாவில் தலைக்குப்புறக் கவிழ்ந்து மூழ்கியுள்ளது. திடீரென தூக்கம் தெளிந்த தாய் கங்கம்மாள் தனது அருகில் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அத்துடன், சுற்றுப்புறத்தில் குழந்தையைத் தேடி பார்த்துள்ளார்.
மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட எம்.எல்.ஏ.!
குழந்தை அண்டாவில் நீரில் மூழ்கிக் கிடந்ததைப் பார்த்து கதறியுள்ளார். அதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், குழந்தையை மீட்டு மோரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுச் சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


