Homeசெய்திகள்தமிழ்நாடு"கழிவுப் பொருட்களை எரிப்பது குறைந்துள்ளது"- மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!

“கழிவுப் பொருட்களை எரிப்பது குறைந்துள்ளது”- மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!

-

- Advertisement -

 

"கழிவுப் பொருட்களை எரிப்பது குறைந்துள்ளது"- மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!

we-r-hiring

போகிப் பண்டிகையான இன்றைய நாளில் சென்னை 15 மண்டலங்களில் காற்று மாசு அளவு அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்தததாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000 வழங்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

போகிப் பண்டிகை காரணமாக, சென்னையில் தேவையற்ற பொருட்களை தெருக்களில் வைத்து தீயிட்டு கொளுத்தியதால், சென்னை முழுவதும் அதிகாலையில் காற்று மாசு ஏற்பட்டது. புகை மற்றும் பனிமூட்டம் காரணமாக, விமான சேவைகள், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்த சூழலில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போகிப் பண்டிகை நாளில் சென்னையின் 15 மண்டலங்களில் காற்று மாசு அளவு அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்தது. ஜனவரி 13- ஆம் தேதி காலை 08.00 மணி முதல் ஜனவரி 14- ஆம் தேதி காலை 08.00 மணி வரை கழிவுப்பொருட்களை எரிப்பது குறைந்துள்ளது.

“இருமொழிக் கொள்கையே தொடரும்”- தமிழ்நாடு அரசு விளக்கம்!

விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் டயர், டியூப், பிளாஸ்டிக் எரிப்பது குறைந்துள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் அதிகபட்சமாக 270 ஆக காற்று தரக்குறியீடு பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக, அண்ணா நகரில் காற்று தரக்குறியீடு 131 ஆக பதிவாகியுள்ளது. போகிப் பண்டிகை நாளில் சென்னையில் 15 மண்டலங்களில் காற்று மாசு அளவு அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்தது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ