Homeசெய்திகள்தமிழ்நாடுகேப்டனுக்கு வீர வணக்கம்- தொண்டர்கள் முழக்கம்!

கேப்டனுக்கு வீர வணக்கம்- தொண்டர்கள் முழக்கம்!

-

 

கேப்டனுக்கு வீர வணக்கம்- தொண்டர்கள் முழக்கம்!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ள தொண்டர்கள் கேப்டன் கேப்டன் என முழக்கமிட்டனர். அதேபோல், கேப்டனுக்கு வீர வணக்கம் எனவும் முழக்கமிட்டப்படி தொண்டர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.

விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு மக்கள், தொண்டர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் பிரியா விடைக் கொடுத்துள்ளனர். விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் ஊர்ந்துச் செல்லும் வாகனத்தின் பின்னே உள்ளம் நொந்து செல்லும் மக்கள்.

விஜயகாந்தின் ஊர்வலம் தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பகுதியைக் கடந்து செல்கிறது. மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் விஜயகாந்த் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.

விஜயகாந்த் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மலர்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கம்பீரமாக காட்சியளித்தவர் கண்மூடியதைப் பார்க்க முடியாமல், கண்ணீருடன் மக்கள் வழி அனுப்புகின்றனர். இறுதி ஊர்வலம் செல்லும் சாலையில் விஜயகாந்தின் பேனர்கள் உள்ளிட்டவை வழிநெடுகிலும் வைக்கப்பட்டுள்ளன.

MUST READ