
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

‘லியோ’ படத்தின் திரிஷா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
மாதையன் என்பவர் காரை ஓட்டிச் சென்றுக் கொண்டிருந்த போது புகை வந்துள்ளது. இதைப் பார்த்த மாதையன், சாலையின் ஓரம் காரை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி சிறிது தூரம் தள்ளி நின்றுள்ளார். இதையடுத்து, கார் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இது குறித்து தகவலறிந்து சென்று வேலூர் தீயணைப்புத்துறை நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சியடித்து, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். இருப்பினும், கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்து காரணமாக, சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு இயக்குனர் மிஸ்கின் வேண்டுகோள்
முன்னதாக, கடந்த 2010- ஆம் ஆண்டு மாடல் காரை செகணண்ட்டாக வாங்கிய மூன்று நாட்களில் தீப்பிடித்து எரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


