
காவிரியில் தமிழகத்திற்கான நீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

“கேள்வி எழுப்பும் அனைவருக்காக இந்த 5 ட்வீட்கள்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி!
கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பு வினாடிக்கு 18,473 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 13,473 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கனஅடி நீரும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவு மற்றும் ஒகேனக்கல் பகுதிக்கு இன்று காலை நிலவரப்படி, வினாடிக்கு 12,500 கனஅடி நீர் வந்துக் கொண்டிருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரியில் 39 டி.எம்.சி.க்கும் மேல் கர்நாடகா தண்ணீரைத் தர வேண்டி உள்ள நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு இந்தியக் குடியுரிமை!
இதையடுத்து, 10 டி.எம்.சி. நீரைத் திறப்பதாக கர்நாடகா அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


