Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் 3 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 3 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு

-

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் .

தமிழ்நாட்டில் 3 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு7 – 11 செமீ மழைக்கு வாய்ப்பு என்பதால் 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 5மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 7,006 புத்தொழில் நிறுவனங்கள் தொடக்கம்

 

5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 5மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.

3 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய 3மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது.

MUST READ