Homeசெய்திகள்தமிழ்நாடுகவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

-

 

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரின் மகனும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியின் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்துள்ளனர்.

“நிலவில் வலம் வரத் தொடங்கியது ரோவர்”- இஸ்ரோ அறிவிப்பு!

அமைச்சர் பொன்முடி, கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டுகளில் கனிமவளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்த போது, குவாரிகளில் அளவுக்கு அதிகமான செம்மண் அள்ளி 28 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் மீது கடந்த 2012- ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவுச் செய்தது.

இதன் அடிப்படையில் அமைச்சர் பொன்முடி, எம்.பி. கவுதம சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த மாதம் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர் பிரிட்டன் பவுண்டுகள் உள்பட 81.75 லட்சம் ரூபாய் ரொக்கம், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்.

செம்மண் முறைகேட்டில் ஈட்டிய தொகையை சட்டவிரோதமாக வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக அமலாக்கத்துறைக் குற்றம் சாட்டுகிறது. இந்த நிலையில், கவுதம சிகாமணி உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.

சந்திரயான் 3 லேண்டர் தரையிறக்கம்: யூடியூப் நேரலையை 80 லட்சம் பேர் பார்த்து உலக சாதனை!

இந்த குற்றப்பத்திரிகை விரைவில் எண்ணிடப்பட்டு, கோப்புக்கு எடுக்கப்படும் என்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.

MUST READ