Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை மாமன்ற உறுப்பினர் மயங்கி விழுந்து பலி

சென்னை மாமன்ற உறுப்பினர் மயங்கி விழுந்து பலி

-

சென்னை மாமன்ற உறுப்பினர் மயங்கி விழுந்து பலி

சென்னை மாநகராட்சியின் 146 வார்டு மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் கு.சண்முகம் இன்று காலை 9 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

DMK

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். சென்னை ஓமத்தூரார் மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவு சிலைக்கு மாலை அணிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் அதனை தொடர்ந்து அமைதி பேரணியை நடத்தினார். மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணி சென்றனர்

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

இந்த அமைதிப் பேரணியில் பங்கேற்ற சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், 146வது வார்டு மாமன்ற உறுப்பினருமான சண்முகம் திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக வரை மீட்ட திமுக தொண்டர்கள், அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் திமுகவினரிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியம், சண்முகம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

திமுக சார்பில் போட்டியிட்டு வென்றிருந்தார் ஆலப்பாக்கம் சண்முகம். இதனால் இந்த வார்டுக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ