

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று (நவ.30) பிற்பகல் 01.00 மணி வரை மழை தொடரும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நண்பர்களை நம்பிச்சென்ற மாணவி பலாத்காரம்.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி..
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 16 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, அதாவது பிற்பகல் 01.00 மணி வரை மிதமான மழை தொடரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 40 குறைந்தது!
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 19 செ.மீ., கொளத்தூர், திரு.வி.க. நகர், பொன்னேரியில் தலா 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.


