spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து - இளைஞர் பலி!

இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து – இளைஞர் பலி!

-

- Advertisement -

 

Accidentசென்னை மதுரவாயலில் இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 24 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

we-r-hiring

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த ஜீவா(24), சுந்தர்(20), சதீஷ்(24) ஆகியோர் ஒரே இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஆசாத் அன்சாரி(26) என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்த நிலையில், இதில் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் 24 வயதான ஜீவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுந்தர் மற்றும் சதீஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் உயிரிழந்த ஜீவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய ஜார்கண்ட மாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஆசான் அன்சாரியை கைது செய்தனர்.

MUST READ