Homeசெய்திகள்தமிழ்நாடு"சென்னை புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது"- தமிழக அரசு விளக்கம்!

“சென்னை புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது”- தமிழக அரசு விளக்கம்!

-

- Advertisement -

 

"சென்னை புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது"- தமிழக அரசு விளக்கம்!
File Photo

புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மிக முக்கியமான ஏரியாகும். இந்த ஏரியானது திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் பரப்பு பகுதி 20.27 ச.கி.மீட்டர் ஆகும். இந்த ஏரியின் முழு உயரம் 2,120 அடியாகும். இந்த ஏரியின் முழு கொள்ளளவு 3,300 மி.க. அடியாகும். ஏரியின் கரையின் நீளம் 7,090 மீட்டர் ஆகும். இன்றைய (டிச.07) காலை 06.00 மணி நிலவரப்படி 20.00 அடி நீர் இருப்பு உள்ளது.

வெள்ளத்தில் கலந்த கெமிக்கலால் மக்கள் படும் அவதி….விஜய் மக்கள் இயக்கத்தினரின் நெகிழ்ச்சி செயல்!

ஏரியின் கொள்ளளவு 3012 மி.க. அடியாக உள்ளது. மேலும் இன்று (டிச.07) காலை 06.00 மணி நிலவரப்படி, புழல் ஏரியின் நீர்வரத்தானது 550 கனஅடியாக உள்ளது. தற்போது ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயலினால் அதிக அளவு கன மழை பெய்ததினால் ஏரிக்கு நீர் வரத்து கூடுதலாக வந்து கொண்டிருந்ததால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்த நிலையில் ஏரியில் இருந்து ரெகுலேட்டர் வழியாக உபரி நீர் வினாடிக்கு 5,500 கன அடி வெளியேற்றப்பட்டு வந்தது. அப்போது ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால் ஏரியில் மிக கடுமையான அளவில் அலைகள் ஏற்பட்டு கலங்களின் மேல் தண்ணீர் வெளியேறியது, இதனால் காவல் துறை பாதுகாப்பு அறை பின் பகுதியில் கரையில் உள்ள பக்கவாட்டு தாங்கு சுவர் (Parapet wall)-ன் பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த கருங்கல்லால் ஆன Apron சரிந்து மண் அரிப்பு ஏற்பட்டது.

மிக்ஜம் புயல் பாதிப்பு… களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்கத் தொண்டர்கள்!

இது ஏரியின் FTL விட 2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, இதன் வழியாக தண்ணீர் வெளியேறவில்லை, மேலும் கலங்கல் வழியாக அலைகளால் தண்ணீர் வெளியேறியதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது.

தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் கிராவல் மண் கொட்டி மட்டப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு திருவள்ளூர் கொசஸ்தலையாறு வடிநில கோட்டத்தின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

MUST READ