Homeசெய்திகள்தமிழ்நாடுரேசன் அரிசியில் போலி குங்குமம், கோலமாவு தயாரித்து விற்ற வாலிபர் கைது!

ரேசன் அரிசியில் போலி குங்குமம், கோலமாவு தயாரித்து விற்ற வாலிபர் கைது!

-

குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி போலியான குங்குமம், கோலமாவு தயாரித்து அதிக விலைக்கு விற்ற வாலிபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் அரிசி போன்ற அத்தியாவசிய இன்றியமையா பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை போலீசார் தீவிர சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொருக்குப்பேட்டை பகுதியில் ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருப்பதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சென்னை வடக்கு அலகு காவல் ஆய்வாளர் ஹேமலதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ஹேமலதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் கொருக்குப்பேட்டை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கருமாரியம்மன் நகர் 6வது தெருவில் உள்ள ஒரு கடையில் சென்று சோதனை செய்தபோது அங்கு 44 மூட்டைகளில் 1100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதும், தமிழக அரசு மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் அரிசியை குறைந்த விலையில் பெற்று அதில் சிகப்பு நிற வண்ணத்தை சேர்த்து குங்குமம் மற்றும் கோலமாவு ஆகியவற்றை தயாரித்து, அதிக விலைக்கு விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசி சட்டவிரோதமாக பதுக்கி வைத்து குற்றத்திற்காக தண்டையார்பேட்டையை சேர்ந்த கார்த்திக் (33) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ரேஷன் அரிசியை கடத்தியதற்காக சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் இருந்த 1100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

MUST READ